மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 FEB 1947
இறைவன் அடியில் 28 JUN 2022
திருமதி கனகசெளந்தரி சண்முகரத்தினம் (நிலானி, துளசி அம்மா)
வயது 75
திருமதி கனகசெளந்தரி சண்முகரத்தினம் 1947 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகசெளந்தரி சண்முகரத்தினம் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகரத்தினம்(Retd. Engineer Ceylon Cement Factory) அவர்களின் அன்பு மனைவியும்,

துளசிதரன்(Microsoft- Sri Lanka) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஞானநிவேதிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(Lecturer - Ceylon German Technical Training Institute), ஞானலிங்கம்(Retd. Engineer Ceylon Electricity Board), லிங்கசௌந்தரி( Attorney at Law) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பமிலாதேவி, புவனேஸ்வரி(Retd. Teacher J/Vembadi Girls’ High School and Colombo Hindu College), காலஞ்சென்ற துரைராஜா, இரஞ்சித்(Accountant), சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia வில் பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துளசிதரன் - மகன்

Photos

Notices