Clicky

தோற்றம் 24 FEB 1930
மறைவு 30 AUG 2021
அமரர் கனகசிங்கம் ஆறுமுகம்
ஓய்வுபெற்ற அதிபர்- கிளிநொச்சி சென் திரேசா, கிளிநொச்சி விஞ்ஞான கல்வி கூடம், ஓய்வுபெற்ற ஆசிரியர் - காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, செங்குந்தா கல்லூரி, கிளிநொச்சி சென் திரேசா, கிளிநொச்சி விஞ்ஞான கல்வி நிலையம்
வயது 91
அமரர் கனகசிங்கம் ஆறுமுகம் 1930 - 2021 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Seran (மகன்) 02 SEP 2021 United Kingdom

மண்ணில் பிறந்த எவர்கும் மரணம் என்பது நிச்சயமே இன்று ஐம்பதைத் தாண்டுவது அரிதாம்! இரு நாற்பதைக் கடப்பது மிகப்பெரிதாம்! தொன்னூறை தாண்டியே ஓடினோம் என்பது இன்று சாதனை கொண்ட வாழ்வுதானே; நீவிர் கொண்ட இறைபக்தியும் நல் ஓழுக்கமும் இதன் சான்றுதானே! அன்று நீ ஒரு ஆலமரமாய் பல் உறவுகள் பறவைகளாய் வந்து குடியமர்ந்து இளைப்பாறியே தன்னிலைதேற்றி தன்னலம் கொண்டு பறந்தே சென்றது! ஆலை விழுதுகள் வேறெங்கோ வேர் ஊன்றி தான் வளர்ந்த மரத்தினை மறந்தே சென்றிடினும் ஆழம் கொண்ட வேராய் பண்பினிலும் நல்நடத்தையினிலும் வேர் ஊன்றியே உன்னில் கனிந்த உம் கனிகளாம் எமக்கு நற் பண்பு தந்தாயே! ஆசானாய் நீ எமக்கு அகரம் சொல்லி ஏற்றுவித்தாய் அன்று பலர் சிகரமாய் உலகில் இன்று. உன் பிரம்பு பட்டு சிவந்த கரம் இன்றுஐொலிக்கிறது உலகில் சிவக்கிறது! அன்று கற்பித்த ஒழுக்கத்தால் உனை எத்தனையோ வசை பாடி இருக்கிறோம்! இன்று நினைத்தால் கண்களில் நீர் துளிர்க்கிறது! இது ஒரு மாணவன் கூற்ற! உன் மகனாக இருப்பினும் மாணவனாக "கிளிநொச்சி விஞ்ஞான கல்வியில்" படிக்கும்போது பட்ட நிந்தைஎனை சிந்திக்கவே வைத்தது ஆசானுக்கு மகனும் மாணவனும் ஒன்றே! கற்றதில் இதுவும் ஒன்றே; உடல் தளர்ந்து கால்களும் வளங்காது பேசும் பொருளும் விளங்காது நடையின் பிணமாக நீ வாழ்ந்த இச்சில காலம்... பூவாக மலர்ந்த மலர் பொன்னெழில் உனை சுமந்த அம் மலர் என்றும் உன் ஒளியாய் பிரகாசித்த மலர் பேசும் உன் மொழியினில் கலந்த அந்த மலர் பேசா மடந்தையாய் நீ நேசித்த மலர் உதிர்ந் சேதி அறிந்தாயோ அன்றே நீ உனை இழந்தாயோ இது துணையின் பிரிவால் வந்தது யாரும் அறிவர், "மலர் மலர்"என்று தினம் ஆயிரம் மலர் மலரும் உன் வாயினாலே மலர்த அந்தமலர் உன் நேசமலர் உதிர்ந்து தன் வாசம் இழந்ததும்.. உன் உள்ளம் சோர்வினைகொண்டே சோகத்தில் ஆழ்ந்தே நினைவுகளை நிறுத்தி நிஜத்தினை மறந்ததே சிலகாலம் வாழ்தாய் இன்றோ அவனியை துறந்தே மறு உலகம் சென்றாய் எங்கள் மதிப்புக்குரிய அன்பு அப்பா உங்கள் பண்பும் நல்நடத்தையும் எங்கள் மனதில் என்றும் விடை தருகிறோம் உம் ஆத்ம சாந்தி க்காக இறைவன் பாதம் பற்றுகிறோம் ஓம்சாந்தி சாந்தி சாந்தி ??????????????