1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
22
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rüsselsheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசிங்கம் பிரபாகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிரானவனே எங்கே சென்றுவிட்டாய்
என்னை தவிக்க விட்டு
நடந்ததெல்லாம் கனவாக இருக்க கூடாதா
என மனம் துடிக்குதடா
பிரபு பிரபு என உங்கள்
நினைவு தானே எப்பொழுதும்..
எங்கே சென்று விட்டீர்கள் இப்போது!
உன்னை மீண்டும் சேர
மனம் துடிக்குதடா!
ஓராண்டு சென்றாலும்
உனை சேரும் நாளை எண்ணிவாழ்கிறேன்
பிரபுஎன்றும் உங்கள் நினைவுகளுடன்....
அப்பா எங்கே என்று ஒவ்வொரு
விடிப்பொழுதும் எமதுவிழிகள் தேடுகிறது
அப்பா உங்களை!!!
எங்கே சென்றுவிட்டீர்கள் அப்பா!
கதறியழுகின்றோம்....
எமது ஆருயிரான எங்கள் அப்பா
நீங்கள் எமை விட்டு
ஓராண்டு கடந்தாலும் என்றும்
எமை விட்டு நீங்காது உங்கள் நினைவுகள்
எங்கள் அன்பானவனே உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்
தகவல்:
மனைவி, பிள்ளைகள்