யாழ். கந்தமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தனபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
உங்கள் அழகான முகமும்,
தீராத சிரிப்பும், அமைதியான பேச்சும்,
மறையுமா எம் மனதைவிட்டு- ஏங்குகிறோம்
ஒருமுறை திரும்ப பார்க்க மாட்டோமா என்று
அன்புடனும், அளவற்ற பாசத்துடனும்,
கண் இமைக்குள் வைத்து வளர்த்து விட்டு,
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு,
மீளாத் துயில் கொண்டது ஏனோ?
அம்மாவுக்கு இன்னொரு அப்பாவாகவும்,
உம் பிள்ளைகளுக்கு தெய்வமாகவும், விளங்கினீரே,
இன்று தெய்வமாய்ப் போனதேனோ?
தேடித் தான் அலைகிறோம் காரணங்களை....
தோழிலும் மார்பிலும் சுமந்தீரே
தோழனைப் போல் அரவனைத்தீரே
எப்படித்தான் மணம் வந்ததோ
எங்களையும் அம்மாவையும் தவிக்க விட்டு செல்ல..
கண்ணீர்த் துளிக்கு பஞ்சமில்லை
உங்கள் நினைவுகள் கண்முன் வருகையில்
அடக்க முடியவில்லை அழுகையை
யாரேனும் ‘அப்பா’ என்று அழைக்கையில்
அப்பா என்ற அழைப்பிற்கு ஓய்வு கொடுத்து
சென்றீரோ ஓய்வு நீங்கள் எடுக்க?
ஆறுதல் சொல்ல ஆயிரம் உறவுகள்- இருந்தும்
யார் தருவார் உங்கள் அன்பினை..
அறிவுரை கூறுவதில் ஆசானாய் விளங்கினீரே- அன்று
அலைபாயுதே மனம் உங்கள் வார்த்தைகளைத் தேடி- இன்று
வழி மாறினால் தவிக்கிறோம்- இன்று
வழித்தடமாய் நீங்கள் இல்லையே என்று
அன்பு அப்பாவே!
கண் நிறைந்த நீரோடு- உங்கள்
நினைவுகள் சுமந்த நெஞ்சோடு
கண்ணீர்விட்டு தேடுகிறோம்
நீங்க எங்கே போனீர்கள்
எங்களைத் தவிக்க விட்டு
ஒன்று இரண்டு அல்ல ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
என்றென்றும் எழிலோடு எங்கள் நெஞ்சில் வாழ்வீர்கள்
கண்ணீர்த் துளிகளோடு,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்....
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்...
May his soul Rest in peace. May God guide the family to go through this difficult time.