Clicky

நன்றி நவிலல்
மலர்வு 27 MAR 1946
உதிர்வு 07 OCT 2021
அமரர் கனகசபை புண்ணியமூர்த்தி
பிரபல வர்த்தகர், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் செயலாளர்
வயது 75
அமரர் கனகசபை புண்ணியமூர்த்தி 1946 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு கிழக்கு வீராமலை 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை புண்ணியமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.

உங்களை பிரிந்து நாட்கள்
முப்பத்தொன்று கழிந்து போயிற்று
நாட்கள் மாதங்களாய் கழிந்து ஓடினாலும்
முப்பொழுதும் எப்பொழுதும் உங்கள்
நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்
எம் அன்பை உங்கள் காலடியில்
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்
ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 06-11-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை 22 Av. Paul Vaillant Couturier 93000, Bobigny, France எனும் முகவரியில் உள்ள மகன் சத்தியவதன் இல்லத்தில் நடைபெற்று அதனைதொடர்ந்து Pressing GM4, 51 Av. Paul Vaillant Couturier, 93120 La Courneuve, France எனும் முகவரியில் மதிய போசன நிகழ்வு நடைபெற விருப்பதால் அதில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வந்து பங்கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திபெற பிரார்த்திக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.