யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசமழை பொழிந்து நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
பாவிகள் நாங்கள் உங்கள் நினைவில்
பரிதவித்து நிற்கின்றோம் இன்று...
காலங்கள் கடந்து போகும் ஆனால்
எம் அன்பிற்கினிய அப்பாவே உங்கள்
நினைவுகள் எம்மை விட்டு மறையாது!
31 நாட்கள் சென்றதுவோ அதை ஏற்க
மறுக்கிறது எம் இதயம்...
எம் கண்ணிறைந்த கண்ணீரோடு மலர்தூவி
அஞ்சலிக்கின்றோம் அப்பா!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.