1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகசபை பத்மநாதன்
முன்னாள் வர்த்தகர், இலுப்பையடிச்சந்தி
வயது 77
அமரர் கனகசபை பத்மநாதன்
1945 -
2023
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 26-08-2024
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை பத்மநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
அச்சுறுத்த எங்கே?
பிரிந்து போனீர்கள்!
நீங்கள் இல்லாத வாழ்வு
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகி போனாலும்
எம்முன்னே நீங்களும் அம்மாவும்
எந்நாளும் உயிர் வாழ்வீர்கள்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்