Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 JUL 1941
இறப்பு 06 AUG 2026
செல்வி கனகசபை மகேஸ்வரி 1941 - 2026 வசாவிளான் தெற்க்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வசாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனை கொழும்பு-13 மற்றும் கொட்டைக்காடு இரண்டாம் குறுக்கு ஒழுங்கை கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆருயிர் தாயே, அக்காவே.....

இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!

அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
 என்று நாங்கள் யாரை அழைப்போம்?

காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?

நாட்கள் 31 சென்றாலும்
ஆறவில்லை மனது
நாட்கள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 03-09-2026 வியாழக்கிழமை அன்று மு.ப கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும். வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 05-09-2026 சனிக்கிழமை அன்று , 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். ஓம் சாந்தி!

முகவரி:
கொட்டைக்காடு,
2ம் குறுக்கு ஒழுங்கை,
கோண்டாவில் கிழக்கு.

இங்ஙனம், கனகசபை ஜெயசந்திரக்குமார்(சகோதரர்)
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute