யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அனந்தசயனன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
அன்பால் என்றும் எத்தனை நாட்கள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்
நாட்கள் 31 ஓடி மறைந்தாலும்
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உயரமான உருவம் இறுக்கமான பார்வை அளந்தே உதிரும் வார்த்தைகள்... கொழும்பில் தீயணைப்பு படையில் ஆரம்பித்த பயணம்... லண்டனில் எரிபொருள் நிலையங்கள் என்று என்றுமே பரபரப்புக்கு பக்கத்திலேயே சுவாசித்த...