
சிவமயம்
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கைதடி, கண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரத்தினம் தவநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 10-02-2020 திங்கட்கிழமை அன்று கீரிமலையில் நடைபெறும். பின்னர் 12-02-2020 புதன்கிழமை அன்று வீட்டுக் கிரியையும், 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டியில் உள்ள அவரது இல்லத்தில்(இல. 292 D.S சேனநாயக்க வீதி, கண்டி) நடைபெறவிருக்கும் நினைவஞ்சலி நிகழ்வில் தாங்களும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன் நினைவஞ்சலியைத் தொடர்ந்து பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு எமது துயரில் பங்கெடுத்து நேரிலும், தொலைபேசி, Email, Sms, Facebook, Whatsapp மூலமும் ஆறுதல் கூறியும், அஞ்சலிப் பிரசுரம் வெளியிட்டும், மலர்மாலை சாத்தியும், பொன்னாடை போர்த்தியும், மலர் வளையம் வைத்தும், தேவாரம் ஓதியும், பூதவுடல் சுமந்தும், இறுதிக் கிரியையில் கலந்துகொண்டும் பலவித உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் கண்டி, கொழும்பு வர்த்தகர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.