யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரத்தினம் தருமபூபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-04-2024
தாயே நீங்கள் எம்மைப் பிரிந்து
ஓராண்டு காலமானதுவோ!
அருள் விளக்கே நீங்கள் அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில் தோன்றுதம்மா
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தமும் உங்கள் நினைவு
நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள்
சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
அரும்பசி வந்தபோது அம்மா உங்கள் நினைப்பு
ஆற்றா நோய்க்கும் நீயே தானேயம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும்- என்ன
அன்னையே உனக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு
உன்னைத் தொழுதேத்த
எம் முன்னே நீங்கள் இல்லையம்மா
உன்னைப் போல் ஓர் தெய்வம்
இப்புவியில் இல்லையம்மா
மனக்கண்ணில் நாளும்
உனைக்கண்டு துதிப்போமம்மா
மண்ணில் எம் உயிர் வாழும் காலம் வரை!
மனதோடு எமை சுமந்து பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் ஒன்று ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின் துயர்
நெஞ்சை விட்டு நீங்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை எதிர்வரும் 05.04.2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
குப்பிழான் தெற்கு,
குப்பிழான்.
யாழ்ப்பாணம்.