யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wesel ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் சிறிஸ்கந்தராஜா அவர்களின் நன்றி நவிலல்.
பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளிவிளக்கே
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த
உறவுகளை கைவிட்டு சென்றதேனோ
பிரிவால் வாடிநிற்கின்ற உள்ளங்கள்
தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே
நின் உறவின் அடிதேடி துடிக்கின்றதே
மண்விட்டு மறைந்து நீங்கள்
விண்நோக்கி சென்றாலும்
கண்விட்டு மறையாமல்
கனகாலம் இருப்பீர்கள்
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கனகரட்ணம் சிறிஸ்கந்தராஜா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.