31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் கனகரட்ணம் சீவரட்னம்
(Thiruvadi Tamil)
Managing Director of Seevam Industries
வயது 69
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் சீவரட்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு
கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தீரே!
உயிருக்கும் மேலானவரே உம் நினைவோடு
நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடைதிறந்து!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்