யாழ். வசாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rüdtligen-Alchenflüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பிரதீப்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
யாதுமாகி நின்றார் .....................
அனுதினம் அன்பை பொழிந்து ஆண்டவன் சிந்தையில் நனைந்து ஆலயம் அனைத்தும் தொழுது கண்ணின்
மணிபோல கலந்து வாழ்ந்த கணவானே என் கணவனே ,.....!
ஆறாத வலி தந்து நீறாக போய்விட்டீர்
எப்படி தாங்குவது
எப்படி தூங்குவது
பதினேழு வருட பந்தம் முடித்து என் சொந்தம் விடைபெற சோகம் சொந்தமானது எந்தன் குருவியே உனை
இழந்ததால் கண்கள் அருவியானது
சுடு சொல் பேசியது இல்லை
சுமை தூக்க விட்டதில்லை
கடிந்து கொண்டதில்லை
எனக்கு கவலை தந்ததில்லை
இன்று இடிந்து போய் உள்ளேன் ஐயனே அருகில் நீ இல்லை
சிரித்த முல்லையே சின்ன பிள்ளையே வெள்ளை மனம் கொண்ட வெண்தாமரையே
உந்தன் உயிர் வீடு இடியும் போது என்ன என்ன சொல்ல முயன்றனையோ
கோவிலும் குளமும் என்றே கடந்த எம் வாழ்வுக்கு சாவினை வந்ததன் காரணம் ஏனோ
உண்மையும் மென்மையும்
மேன்மையும் கூடிய வாழ்விற்கு
வேதனை சோதனை வந்தது எதற்கு
பாசம் அளாவிய
கரமே
என்னை கரம் பிடித்த வரமே
எனக்கு குங்குமம் சூட்டிய மங்களமே
என்னை தனிக்கவிட்டு
தவிக்கவிட்டு போனதன் தேவை என்ன
ஐயனே .......
அனுஷா அனுஷா என்று அடிக்கு ஒருதரம் அழைத்த குரல் ஓசை அசரீதியாய் அன்றி ஆழ்மனதில் ஒலிக்கிறது
ஈசனே இறைவா எந்தன் நேசனை பறித்ததனால் நீயும் சிறைவா
காப்பரனாய் நின்ற கணவனை
காவுகொண்டது குற்றமே எனக்கும் மகனுக்கும் ஏற்பட்ட துயரத்தை
வேறு எவருக்கும்
கொடுக்காதே என்பது வேண்டுதல்
ஜாதுமாகி நின்ற கணவனே தங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
அன்புடன் மனைவி அனுஷா
*******
பூமியை வீட்டு ஏன் போனது சாமி ........... .. ......... ..
அப்பா
தீர்க்கமற நிறைந்திருந்த நித்தில நிலவே
பக்தி பரவசத்தின் உச்சமே
பாசத்தின் படைவீடே நேசத்தின் தேசமே அன்பின் அடி நாதமே பண்பின் படிக்கல்லே
பாசத்தின் வெளிப்பாடே எப்படி முடிந்தது என்னைவிட்டு விபெற
நேற்றுவரை எமக்கு வரம் என்று இருந்த வரமே எப்போதும் எனை தாங்கிய கரமே
ஒரு நாழிகையேனும் என்னை
மறந்து போகாத உங்களால் எப்படி இறந்து போக முடிந்தது
ஆண்மா லயிக்கும் இடமாம் ஆலயப்பதிகளே கதி என்று வாழ்ந்த உங்களுக்கு _அந்த ஆண்டவனும்
செய்துவிட்டான் சதி
கல்யாணி இராகத்தில் கதகதப்பாக நகர்ந்த வாழ்வு இன்று முகாரி இராகத்தில் முணுமுணுக்க படுகிறது
யாரிடம் சொல்வது யாரை நோவது காலத்தை வைவதா? காலனை கொல்வதா?
பதிலற்ற வினாவாகிவிட்து
வாழ்வு. எனினும் இரும்பை ஒத்த மனவலிமை கொண்டு பயணிப்பேன் என்
அப்பா பிரதீப்குமார் முன் நிற்பார் உங்களை அவரை நான் வழிபடுவேன்
எனக்கு அவர் வழிவிடுவார்
மகன் அஜேஸ்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 29-03-2026 ஞாயிற்றுகிழமை அன்று மு.ப 11:45 மணியளவில் நடைபெறவுள்ள ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் , அதனைத்தொடர்ந்து நடைபெறும் வழிபாடு, மலர் அஞ்சலி, நினைவுகூர்தல் என்பவற்றிலும் தாங்கள் குடும்ப சகிதகுடும்ப சகிதம் கலந்து சிறப்பித்து, தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
நடைபெறும் மண்டபம்:
Eystrasse 99
3422 Kirchberg.
ஓம் சாந்தி
குட்டி உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி