
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரத்தினம் பகீரதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும்
ஆறாது அப்பா நம் துயரம் - நீங்கள்
இல்லையென்பது இன்னமும் தான்
ஏற்க மறுக்கிறது நம் இதயம் - ஏனெனில்
நீங்கள் எம் உள்ளங்களில் வாழ்கின்றீர்கள்
பொட்டிழந்து பூவிழந்து நிற்கின்றேன்
நான் செய்த பாவம் என்ன
நித்திரையின்றி தவிக்கின்றேன்
நிம்மதியில்லாமல் வாழ்கின்றேன்
ஆண்டுகள் ஒன்று போனாலும்
ஆறாது எங்கள் மனம்..!
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்று எங்கள் விழிகளிலே
வழிகின்றதே கண்ணீர்துளிகள் அண்ணா..!
காலனே உன் நீதியென்ன
கண்களிலே நீருமில்லை
காத்திருக்க பொறுமையுமில்லை
உங்கள் நினைவு மட்டும்
மாறவில்லை அண்ணா..!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி.. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி..!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Maniam Mama Family from Canada