Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JAN 1953
இறப்பு 29 DEC 2021
அமரர் கனகரட்ணம் அரசரட்ணம்
முன்னாள் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபர்
வயது 68
அமரர் கனகரட்ணம் அரசரட்ணம் 1953 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் பத்தர்கேணியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-14 கிரான்ட்பாஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் அரசரட்ணம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 4ஆண்டுகள் ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்

இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்..!

நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 30 Dec, 2021