Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JAN 1953
இறப்பு 29 DEC 2021
அமரர் கனகரட்ணம் அரசரட்ணம்
முன்னாள் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபர்
வயது 68
அமரர் கனகரட்ணம் அரசரட்ணம் 1953 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் பத்தர்கேணியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-14 கிரான்ட்பாஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் அரசரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்றாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உம் நினைவு தான் அப்பா!

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்- அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!

புன்னகை புரியும் உம் முகம் தெரிகிறது
தினமும் ஆனாலும் அது உண்மை
இல்லை என்று நினைத்தவுடன் எம்
மனம் கலங்குகிறது!

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள்- எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 30 Dec, 2021