எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட எங்கள் குடும்பத் தலைவர் கனகரெட்ணம் அரசரெட்ணம் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வந்து எங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் தம் அனுதாபச்செய்திகளை தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், வேண்டிய உதவிகளை வேண்டியவாறு செய்து அன்னாரின் இறுதிக்கிரியையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் கலந்துகொண்டு எமக்கு எல்லா விதத்திலும் ஆறுதல்கள் அளித்த அனைவருக்கும் மற்றும் அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டிய அனைவருக்கும் எங்கள் உள்ளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்