
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகரசன் சரவணமுத்து அவர்கள் 15-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், செல்வரத்தினம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தண்டிகை நாச்சியார், அருளம்பலம், நமசிவாயம், தபேந்திரதேவி மற்றும் ஞானேஸ்வரி(கனடா), வேலாயுதர்(கனடா), பராசக்தி(நோர்வே), கேதீஸ்வரன்(கனடா), நடேஷ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவஞானம் செல்வரத்தினம், இராஜராஜேஸ்வரி மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.