Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 FEB 1941
இறப்பு 17 SEP 2026
திருமதி கனகம்மா பஞ்சாட்சரம்
வயது 85
திருமதி கனகம்மா பஞ்சாட்சரம் 1941 - 2026 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா பஞ்சாட்சரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உடலில் சுமந்து உதிரத்தை உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து என் உருவம் தந்தாயே அம்மா!

இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று

வாழும் காலத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த எங்கள் தெய்வமே!

31 நாட்கள் காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக!

கள்ளமில்லா சிரிப்பும் கனிவான உங்கள் பேச்சும்
வார்த்தைகள் கொண்டு நாம்
வர்ணிக்க முடியாதவை அம்மா!

மாதம் ஒன்று  சென்றாலும் ஆறாது எங்கள் மனம்
கண்ணீர் பூக்களால் காணிக்கை செய்து
உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 19 Sep, 2026