

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த காமாட்சி அண்ணாமலை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்...
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிற்கான இரங்கல் திருப்பலி 11-02-2023 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தையினால் ஒப்புக்கொடுக்கப்படும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Paradise ❤️? will always remember your sweet grace and presence ?