கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி, மானிப்பாய் சங்குவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது குடும்ப விளக்காக பரந்து பிரகாசித்து ஒளி வீசிய அமரர் கமேலேஸ்வரி கந்தசாமி அவர்களின் மரணச்செய்தி கேட்டு ஓடோடி வந்து எமக்கு அன்பும் ஆதரவும் அவ்வப்போது ஆகாரங்மும் வழங்கி ஆறுதலளித்த அன்பு உள்ளங்களுக்கும், உலகின் பல்வேறு தேசங்களில் இருந்து தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கு, மலர்வளையம் கண்ணீர் அஞ்சலிகளை பகிர்ந்தவர்களுக்கும், North Toronto Crematorium Funeral Home இற்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் இறுதிக்கிரியை தகனக்கிரிகைகளில் உடன் இருந்தவர்களுக்கும், எங்களுக்கு பல வகையிலும் உடனிருந்து உதவிய நல் உள்ளங்களுக்கும், எங்கள் குடும்பத்தினரின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி பிரார்த்தனை 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப11:00 மணியளவில் Toronto திருச்சந்தூர் முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது அச்சமயம் தாங்கள் தம் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Toronto Thiruchendur Murugan Temple,
19 penn Dr, North York,
ON, M9L 2A7
We miss you Ammamma