யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலபூரணி சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலி கிழக்கு பகுதியில் வீர செங்குந்தர் முதலியார் பரம்பரையில் வந்துதித்த திரு. திருமதி சின்னத்துரை செல்வம் தம்பதியினருக்கு 1942-07-28 திகதியில் இரண்டாவது செல்லப்பிள்ளையாக கமலபூரணி அவர்கள் பிறந்தார். அன்னாருக்கு கமலம் என செல்லமாக பெயரிட்டு மகிழ்ந்தனர்.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டொன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்
மடியயைத் தருமா??
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
என்றென்றும் எழிலோடு
எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய் !
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் குடும்பத்தினரின் துயரிலும் பங்கு கொள்ளுகின்றோம்