வவுனியா பம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலநாதன் சதுர்ஷிகா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான என் துணைவியே சதுர்ஷிகா
ஒவ்வொரு நிமிடமும் உன்
நினைவால் வாடுகிறேன்
போகும் வழியெல்லாம் உன்
நிழலைத் தேடுகின்றேன் என்
கண்முன் தோன்றமாட்டாயா
யாரிடம் சொல்லி அழுவேன்
யாரிடம் அவள்கதை கூறுவேன்
யாரிடம் அவள்முகம் காணுவேன்- இனி
யாரிடம் அவள் தரும் அன்பைத் தேடுவேன்
எனதுயிர் சதுர்ஷிகா என் உறவே
என்ன வேண்டும் என்றாலும்
எங்கு போகிலும் என்னைத்தேடும் என் சதுர்ஷிகா
உன் நினைவு என்னை வாட்டுதம்மா
பாதியிலே பறிதவிக்க விட்டு போனதேன்
ஏன் என்னை பிரிந்து தனியே சென்றாய்
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை
தவிக்கின்றேன்.. தள்ளாடுகின்றேன்..
தயங்குகின்றேன்.. என் தவமணியே...
உன் பிரிவால் வலிகள் தந்தவளே!
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
உன் புன்னகை காணாது தவிக்கிறேன்
தூக்கம் கெடும்போதெல்லாம்
கொல்கிறது உன் நினைவு!
தூங்கி எழும்போதும் கனக்கிறது என் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம்
கற்பனையாகியதோ!
என்றும் உந்தன் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..