யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலம் திருஞானசம்பந்தபிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்பான ஆசையம்மாவாய் எளிமையான எங்கள் வாழ்வில் உறவாடி மகிழ்ந்தவரே! உங்கள்நினைவுகள்,இனிமைப் பழக்கங்கள் எல்லாமே அழியாதிருக்க,அவசரமாய் உங்கள் உயிரை இழந்து நிற்கின்றோம். இன்று நீங்கள் இல்லை என்ற செய்தி...