6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலைவாணி விஜயகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஆறு சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம் அம்மா!
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அம்மா!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய
எங்கள் அம்மா எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டுப் போக உங்களுக்கு
எப்படி மனம் வந்தது அம்மா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
I may not have had the chance to meet you in person, but seeing the love and care your son has for you. I can truly see how an incredible mom and a wonderful person you had been. And I deeply honor...