
-
24 JUN 1942 - 15 APR 2023 (80 வயது)
-
பிறந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புன்னாலைக்கட்டுவன், Sri Lanka மானிப்பாய், Sri Lanka


அம்மாவின் மறு தெய்வம் நீ அம்மம்மா.... அம்மாவின் அன்பையும் சேர்த்து எமக்கு தந்தவரே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு மறுமுறையும் எம்மை உங்கள் முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் அன்பு காட்டினாலும் உங்கள் அன்பிற்கே எங்கள் மனம் ஏங்கின்றது இன்றும் எமக்கு ஆயிரம் புத்திமதிகள் சொல்லி அன்புடனும் அரவணைப்புடனும் எம்மை வளர்த்தியே அம்மம்மா அம்மா பேசினாலும் உங்கள் காலடியிலே சுற்றி சுற்றியே வருவோமே... இனி யாரிடம் செல்வோம் நீங்கள் எம்மை கூப்பிடும் சத்தம் இன்னும் எம் காதில் கேட்கிறது அம்மம்மா....... காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீரே அம்மம்மா நீர் கண் மூடும் போது கூட உங்கள் அருகில் தானே இருந்தோம் அம்மம்மா எப்படி அம்மம்மா எங்களை விட்டு போக மனம் வந்திச்சு..... வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான் வாருங்கள் மீண்டும் எம் அருகில் வந்து ஆறுதல் தாருங்கள்......
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion