1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 28 SEP 1944
விண்ணில் 06 DEC 2020
அமரர் கைலாயநாதன் ஆறுமுகம் 1944 - 2020 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாயநாதன் ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புருவான எங்கள் அப்பாவே
எங்குமே வியாபித்திருக்க
தன்னலமற்ற உங்கள் அன்பே
சிகரங்களின் சிகரமானது

கன்னத்தில் நீங்களிடும் முத்தமே
நித்தமும் இனிக்க
எண்ணம் யாவும் உங்கள் பொன்முகம்
தேடி அலைகிறர்தே

சர்வமும் எனக்காய் உழைத்தோய்ந்த
உத்தமரே
கர்வம் கடந்து கருணைக் கடலாக
விளங்கினீர்களே

வீடுவாசல் மனையாள் மக்களாய்
மகிழ்ந்தீர்களே
வாடுகிறோம் நாளும்
நீங்கள் இன்றிய வாழ்வுதனில்

எங்கள் அம்மாவிற்காக வாழ்ந்த
வள்ளலே உங்கள் வார்த்தைகள் எல்லாம்
வலிகளை போக்குகின்றதே

அர்த்தமுள்ள வாழ்வை அடைந்த
அன்பு அப்பாவே
கர்த்தாவின் கருணை உள்ளத்தில்
இடம்பிடித்தீர்களே


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 08 Dec, 2020
நன்றி நவிலல் Tue, 05 Jan, 2021