

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 13 இராமநாதன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை
ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர
ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து எமக்கு
ஒளி தந்த தாயே நீ மண்ணுலகை விட்டு
மறைந்தாலும் எங்களின் மனங்களில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் தாயே!!
எங்களின் வளமான வாழ்விற்கு வழிகாட்டி நின்ற தாயே!
ஏற்றிய எம் மனங்களில் நிறைவீர்
இறைவன் தாள்களில் அடைந்திடுவீர்
சாந்தி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மக்கள், மருமக்கள், சகோதரன், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
உங்கள் இழப்புக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்