யாழ். மல்லாகம் தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ettlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசப் மாட்டீன் செல்வரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமே!!!
ஆண்டொன்று போனாலும் ஆறமுடியவில்லை
அன்னையாக, தந்தையாக,
என் செல்வமாக அப்பாவாக
தாத்தாவாக, உற்றார் உறவினர்,
பழகிய நண்பர்களுக்கு பாசமிகு அண்ணாவாக,
மங்காத ஒளிவிளக்காய் வாழ்ந்த
உம்மை(கொரோனா வடிவில் வந்த
காலன் நெடும்தூரம் பிரித்தது ஏனோ.)
உம் நினைவுகள் என்றும் மலர்கிறது.
பாச தீபம் இதயமதில் ஓளி வீசிக்கொண்டே இருக்கிறது.
ஆயிரம் உறவுகள் அணைத்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா?
தாங்க முடியாத வலிகளுடன்,
தூங்காத விழிகளுடன்,
வற்றாதா கண்ணீருடன்,
நிலவு இல்லாத வானம்
போல் வாடி நிற்கிறோம்.
உம் நினைவுகள் தீபமாய் ஒளி வீசிக்கொண்டே இருக்கும்
இவரின் பிரிவை நினைவு கூரும் அனைவருக்கும்
எமது இதயம் நிறைந்த நன்றியும் அன்பும்...
தொடரும் நீங்காத நினைவுகளுடன்....
வாழ்வில் நேசித்தவரை இழப்பினில் மறப்போம்...
மனைவி பேளி ஜொயிஸ் செல்வரட்ணம்.
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.