யாழ். மல்லாகம் தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் சிறில் அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற டானியல் ஜோசப், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கொலட் சிறில்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஏஞ்சலா சுகந்தினி(முன்னாள் ஊழியர்- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்- யாழ்ப்பாணம், நோர்வே), ஜோசப்பின் சர்மினி(வேல்ஸ்), ஜேறோம் பிறாங்லின்(உதவி முகாமையாளர்- செலான் வங்கி, சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பெனடிக்ற்(நோர்வே), றாஜ்குமார்(வேலஸ்), சோபிகா(செலான் வங்கி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பேனாட், றேமன் மற்றும் கிறிஸ்ரின் புஸ்பம், விக்டோரியா, செல்வரட்ணம், குணரட்ணம், லில்லி, சாள்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துவாரகா, தரணிகா, ஹரிஸ், பியோன், சோன், ஜோயஸ், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 30-01-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணிக்கு நல்லடக்க திருப்பலிக்காக யாழ். மல்லாகம் தூய புதுமை மாத ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சிறில் அண்ணாவின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாலச்சந்திரன் குடும்பம், பர்மிங்காம்,பிரித்தானியா.