Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 SEP 1949
மறைவு 26 OCT 2022
அமரர் யோசப் அன்ரனி
வயது 73
அமரர் யோசப் அன்ரனி 1949 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர், 2/2 மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசப் அன்ரனி 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்." -யோவான் 11:25

அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே
 ஏன் அழைத்தான்?

ஈடில்லா எங்கள் பொக்கிஷம்
நீங்கள் தானே உங்களுக்கு நிகர்
வேறு யாரப்பா?

ஊரு உறங்கும் நேரத்திலும்
 எம் மனம் உறங்கவில்லை
எங்களுக்குள் நீங்கள் வாழ்வதால்
நாம் வாழ்கின்றோம்!!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
 நொந்து நூலாய்ப் போகின்றோம்
 ஐயனே உங்கள் சிரித்த முகம்
 பார்க்காமல் தவிக்கின்றோம்!!

ஒருமுறையேனும் உங்கள் முகம்
பார்த்து விடமாட்டோமா..!?
 அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா?
அப்பா எம் நெஞ்சில் நீங்காமல்
 வாழும் எங்கள் இதயத் தீபமே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 28 Oct, 2022