யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோண் பொஸ்கோ ஜெகநாதன் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோண் பொஸ்கோ மேரிறெஜீனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மேரிறோஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெஸ்லின்றோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெபோசினி, யோண்ஜெதுசன், ஜெதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு 10-02-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் தாளையடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மு.ப 09:00 மணியளவில் தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.