![](https://cdn.lankasririp.com/memorial/notice/203376/af4d3329-86e8-4510-a618-10721aa7ea31/25-67a0a109d5f9f.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/203376/5881b242-8136-43c9-9912-3f725fcce714/25-67a0a1097f2d0-md.webp)
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் பஸ்ரியாம்பிள்ளை யோன் அமிர்தநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
"இரக்கம் உள்ள யேசுவே மரித்துப்போன அப்பா (தாத்தா)
வுக்கு நித்திய இளைப்பாற்றியை கொடுத்தருளும்!"
பிள்ளைகளின் நினைவு கூறல்
"அப்பா, நீங்கள் இறைபதமடைந்து
5 வருடங்கள்,
உங்கள் பின்னே வந்த
COVID 19 உலகை உலுக்கியும் 5 வருடங்கள்.
கண்மூடி சிந்தனை செய்யும்
போது தான்,
இந்த 5 வருடங்கள்
உருண்டோடி மறைந்த வேகம் புரிகின்றது.
சிறப்பாக வாழ்ந்து, சிறப்பாக குடும்பத்தை
வாழவைத்து புகழோடு உற்றார்,
உறவினர் வழியனுப்ப விடைபெற்று,
நீங்கள் சென்று 5 வருடங்கள்
கடந்து சென்ற நிகழ்வு,
பிள்ளைகள்
எமக்கு பெரிதாக கவலை
தரவில்லை - ஏனென்றால்
நீங்கள் மறைந்தது அறிவுக்கு
தெரிந்திருந்தும்,
மனக்கண்ணில்
உங்களை அடிக்கடி கண்டுகொண்டு அப்பப்போ அம்மா,
அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டாயா?
அப்பாவின் கட்டிலை விரித்து விட்டாயா?
அப்பா சாப்பிடாமல் நான் எப்படி சாப்பிடுவது? -
என பிள்ளைகள்
எங்களிடம் உரிமையோடு
சண்டை போடுவது வழக்கமாகி விட்டதே..!
அப்பா உங்களை அம்மா மறக்கவிடவில்லை,
அப்பா நீங்கள் அம்மாவுடன் வாழ்ந்த வாழ்கை,
49 வருட திருமண பந்தம்
உங்கள் இறப்புடன் முடியவில்லை என்பதையும்,
அப்பப்போ எலியும் பூனையும் போல்
நீங்கள் இருவரும் முட்டிமோதியமை
வாழ்க்கை புத்தகத்தின் தவிர்க்க முடியாத சில
பல அத்தியாயங்கள் – என்பதையும்,
வாழ்க்கையின் இயல்பான யதார்த்தத்தையும் உணர்த்துகின்றதோ?
பிள்ளைகள் மட்டுமல்ல பேரப்பிள்ளைகளும்
உங்கள் கல்லறை நாடிவருவதும்,
இறைவனை வேண்டி வீட்டிலிலும்,
ஆலயத்திலும் பிரார்த்திப்பதும்
வீண் போகாது அப்பா..!
அப்பா உண்மையில்
நீங்கள் 'லக்கி' தான்!”
"வாழும் போது எம்மை நேசித்தீர், இறப்பில் உம்மை மறவோம்"
" Appa (dad), it's been 5 years since you were called to rest and
It has been 5 years since COVID 19 shook the world.
When we close our eyes and think, we realise how fast these 5 years gone by.
Appa, you had a glories life, you provided a strong back up for our lives
Lots of your relatives and friends visited you during your last days - and
said final goodbye to you at your funeral,
5 years ago, that incident did not affect us that much - because
Though Amma realize that you passed away,
Often Amma, see you in her mind and demand,
whether we gave you food, we made your bed and
how can she eat without giving food to you.
Through her continues actions, Amma did not allow us to forget you.
Appa the life you lived with Amma, it reminds us,
Your (49-year) Marriage bond, did not end with your death.
The fact you and Amma sometime acted like ‘Cat and mouse.’
Remind us, having no couple fights, not reality of marital life!
Appa, not only your children but your grandchildren also
Visiting your Graveyard and
Praying God at home and Church for your Eternal rest,
These prayers will not be gone in vain, Appa.
Appa, really you are 'Lucky' ”
“May Eternal rest grant unto Appa (Thaththa), O Lord, and let perpetual light shine upon him!”
"You loved us while alive, we will not forget you in death"
Leonard/Robinson, We are truly sorry to hear of the loss of your Father /Father-in-law. Please accept our heartfelt condolences and may our prayers help comfort you. - Bavaharan & Family