1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 14 JUN 1970
மறைவு 23 JUL 2021
அமரர் ஜெயசீலன் கந்தசாமி
வயது 51
அமரர் ஜெயசீலன் கந்தசாமி 1970 - 2021 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயசீலன் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11/08/2022

ஆண்டு ஒன்று கடந்தாலும்
 ஆறாத துயரோடு அணையாத
 தீபத்தைப்போல் உங்கள்
 நினைவலைகள் கலந்த
 நெஞ்சோடு வாழ்கின்றோம்...

இன்னொரு ஜென்மம் இருந்தால்
 அதிலும் நீங்களே எங்கள் வீட்டின்
 ஆலமரமாகவும் அதில்
 நாங்கள் விழுதுகளாகவும்
 வர ஆண்டவனை வேண்டுகிறோம்...

எம் உயிருக்கும் மேலானவரே
 உம் நினைவோடு நீர் மறைந்து
 போனபின்பும் உம் நினைவு
சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து
பேராறாய்பெருகுதய்யா மடைதிறந்து!

உம் பாசப்பிணைப்பினால்
 நாம் பலரும் தவிக்கின்றோம்
 இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள்
 அன்புள்ள ஆத்மாவின்
 சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 24 Jul, 2021
நன்றி நவிலல் Mon, 23 Aug, 2021