யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசத்தின் சுமையோடு
எம்மை பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் பறந்து சென்றதேனோ!
ஆணிவேராய் எம்மை
தாங்கி நின்ற எங்கள்
ஆலமரம் சரிந்ததேனோ!
எமக்கு துணையாய்
ஆதரவாய் சிறந்த வழிகாட்டியாய்
என்றும் எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம்சாந்தி...! ஓம்சாந்தி...!! ஓம்சாந்தி...!!!
எங்கள் இல்லத்தரசன் இன்னல் கேட்டு இல்லம் நாடி கண்ணீர் சிந்தி, ஆறுதல் வார்த்தை பேசி, எம்துயரை உங்கள் துயராய் எண்ணி எமக்கு தோழமை கொடுத்த நல் உள்ளங்களே, நேரில் வர இயலாத நேரம் தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் எம்முடன் துயரைப் பகிர்ந்த அனைவருக்கும் எனக்குமுன் என்னவன் நன்றி உங்களை வந்தடைந்திருக்கும் என்பதில் எமக்கு ஐயமில்லை. எம்முடன் நட்பு பாராட்டி தோழமை பூண்ட அனைவருக்கும் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று எங்கள் இல்லத்தரசனின் அந்தியேட்டிகிரியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years