Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 02 JUL 1954
உதிர்வு 11 MAY 2023
திருமதி ஜெயந்தி யோகேஸ்வரன்
C.T.B.C வானொலியின் அபிமான நேயர்
வயது 68
திருமதி ஜெயந்தி யோகேஸ்வரன் 1954 - 2023 கெருடாவில், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி : 19-04-2025

யாழ். வடமராச்சி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தி யோகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

கணவன் மனக்குமுறல்

என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!

தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?

காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாடும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது!

பிள்ளைகளின் மனக்குமுறல்

அம்மா என்ற சொல்லின் சூட்சுமம் நீ
குடும்பத் தலைவியாய் எமக்கு வழிகாட்டியாய்
நீ இருந்தாய் அம்மா!
நாம் எங்கே எப்படி வாழ்ந்தாலும்- நீயே
எம் வாழ்வின் ஒளி விளக்கு!

பாசத்தின் உறைவிடம் அம்மா நீ நல்ல நேசத்தின்
இருப்பிடம் நீ கருணையின் பிறப்பிடம் நீ
எம்மை அன்பாய் ஆட்சி செய்தவள் நீ
ஈராண்டு ஓடி ஒழிந்தது அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எம் மனதில் அம்மா

என்றும் உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

 சகோதரங்களது கண்ணீர் பூக்கள்!

இன்றோடு ஆண்டுகள் இரண்டாகிவிட்டது.....
 உங்கள் அழகு வதனம் காணாமல்
எங்கேயாவது உமது அழகு
 வதனம் போல் தெரிகின்றதா எனத்
தேடுகின்றோம் காணவில்லையே.......
காலத்தின் மடியில் துயில் கொள்ளும்
உங்கள் நினைவில் நாங்கள் நனைகின்றோம்.
எங்கள் மத்தியில் நீங்களும்
வந்து உறவாடுவீர்கள் என்ற நம்பிக்கை
வீணாகமாட்டாது.
வாருங்கள்! வாழ்த்துங்கள்! ஆசீர்வதியுங்கள்!
உங்கள் வம்சம் செழித்து விளங்க
வரலாறு படைத்து மறைந்தும் மறையாது
எங்கள் எல்லோர் மனதிலும் நீக்கமற வாழும்
எங்கள் அக்காவே! நெஞ்சடைக்கும்
நினைவுகளைச் சுமந்தவாறே!
எங்கள் கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்கிறோம்!

 If roses grow in heaven Lord,
please pick a bunch to me
place them in my wife's arms
and tell her they are from me.

Tell her I love her and kiss her
and when she turns to smile
place a kiss upon her cheek
and hold her for a while.
Remembering her is easy,
I do it every day,
but there is an ache in my heart
that never will go away.

with love from your husband
Yogan

தகவல்: குடும்பத்தினர்