யாழ். வடமராச்சி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தி யோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-04-2024
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த தெய்வமே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லையே
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
நாம் சேர்ந்து சிரித்த நாட்களை
எண்ணி அழுகிறோம்
சேர்ந்து கதைக்கவும் முடியாது என்பதால்
கல்லறை வரை மறையாத
களங்கமற்ற பாசம் காலவதியாகி
ஓராயிரம் ஆண்டு சென்றாலும்
இழக்க முடியாத நேசம்!
நெஞ்சம் நெகிழ வைக்கும் அன்பு!
ஆண்டு ஒன்று ஆனாலும் உயிரை உலுக்கி
நடுங்க வைத்த பிரிவு!
நாம் மறைந்தாலும் அழியாத நீங்கள்
நடந்த தெய்வீகப் பயணம்
உறைந்து போன பௌர்ணமியில் உதிராமல்
மலர்ந்தே இருக்கும்
எம் மனத்திரையில் என்றும்!
கடந்துவிட்ட வருடம்தனில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதம்மா
உங்கள் ஆத்மா பிரசாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…
If roses grow in heaven Lord,
please pick a bunch for me.
Place them in my wife's arms
and tell them they're from me.
Tell her that I love her
and when she turns to smile,
place a kiss upon her cheek
and hold her for a while.
Remembering her is easy,
I do it every day,
but there's an ache in my heart
that will never go away.
With love from your husband,
Yogan