Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 23 JAN 1950
இறப்பு 08 JUL 2026
திருமதி ஜெயம் ராஜபதி எமிலியானுஸ்பிள்ளை
வயது 76
திருமதி ஜெயம் ராஜபதி எமிலியானுஸ்பிள்ளை 1950 - 2026 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தெல்லிப்பழை ஆனைக்குட்டி மதவடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயம் ராஜபதி எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஆனதம்மா
உமைப்பிரிந்து ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்!

பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
 வாசம் குன்றா வாழ்வு தந்து
 வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!

பாசமும் பரிவும் தந்து பார்த்துப் பார்த்து
 வளர்த்தது பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
 உங்கள் அன்பின் ஆழம்தான் இன்றும்
எம் விழியோரங்களில் கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
 நீங்கள் எங்களை ஒருபோதும் விட்டு விடவில்லை
 நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

பண்போடும் அன்போடும் பழகி
 உறவினர் பாசமதை பெற்றீர்கள்!
 நம்பவே முடியவில்லையே நேற்றுப் போல் இருக்குதம்மா
 உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
 இன்று எம் அன்னை எமை விட்டு
 விண்ணுலகம் சென்றாலும் உம்மை என்றும்
 எண்ணியே எம்முலகம் சுற்றும்!
இவ்வுலகம் உள்ளவரை....

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute