2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஜெயலஷ்மி குகபாஸ்கரன்
1951 -
2021
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், உடுவில் கந்தையா உபாத்தியார் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயலஷ்மி குகபாஸ்கரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-05-2023
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது
நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதம்மா
நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன
எங்கள் கண்களின் முன்னால்
காற்றோடு போனவளே வா
காலன் வரும் நேரம்
இதுவென்று நீ உரைத்திருந்தால்
காத்திருப்போம்..
மீட்டும் விரல்களை
தொலைத்த வீணைகளாய் நாமிங்கு..
கார் இருளில் கலைந்தவளே..!
நீ எங்கே?
தகவல்:
குடும்பத்தினர்