

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், உடுவில் கந்தையா உபாத்தியார் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயலஷ்மி குகபாஸ்கரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் தர்மராஜா(அராலி வடக்கு), மகாலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து சங்கரப்பிள்ளை சண்முகம், சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குகபாஸ்கரன்(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரி, யோகேஸ்வரன், காலஞ்சென்ற சௌந்தரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயபாஸ்கரன், வனஜா, மகேந்திரன், ஜெயந்தி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் 31ம் நாள் கிரியை 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று உடுவிலில் நடைபெறும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை
எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக,
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details