யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Porte de Pantin ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலஷ்மி ஸ்ரீகாந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 முதல் பி.ப 3:00 மணிவரை லாக்கூர்னேவ் சித்திவிநாயகர் ஆலய மண்டபம் 90, Rue Emile Zola 93120 La Courneuve எனும் முகவரியில் நடைபெறும். தாங்கள் தங்கள் குடும்பத்தினர் சசிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.