சிறு வயதில்..சில வருடங்கள் என் கூட ஒன்றாக படித்த நண்பன் ஜெயக்குமாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.அவரின் பிரிவால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். 1975-1980 காலப்பகுதியில் சட்டநாதர் வீதி திருநெல்வேலி கிழக்கில் கிட்டத்தட்ட 5 வருடங்கள் ரியூஸனில் ஒன்றாக படித்து பின்னர் செங்குந்தாவில் வருடம் ஒன்றாக படித்தவர் பின்னர் பாடசாலை மாறி போய் விட்டார்.யாழ்.மத்திய கல்லூரி என்று நான் நினைக்கின்றேன். அவரை இறுதியாக சந்தித்தது செங்குந்தா மைதானத்தில் கிரிக்கட் விளையாட்டை பார்வையிட வந்த போது.1983 அல்லது 1984 சரியாக ஞாபகம் இல்லை.35 வருடங்கள் கழிந்து அவரை அவரது மரண அறிவித்தல் மூலம் பார்க்கும் துயரம். நண்பா ஜெயக்குமார் உனது ஆத்மா சாந்தி அடைய இறைவன் உன் மீது அருள் புரியட்டும். Receive my deepest condolences