யாழ்ப்பாணம், மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவி சிவகுருநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம்
உன் உடல் எம்மை விட்டு பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு வாழும்
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அம்மா உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை இவ்வுலகில்!
தொலைந்துவிட்ட இந்த
ஒரு மாதம் உம் முகத்தைதேடாத
நாட்களில்லை...???
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.