யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யேசுகுருநாதன் அருட்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் அப்பா நீங்கள்
அழியாத ஓவியம் ஆகினீர்கள்
அழைத்துவிட்டாரோ ஆண்டவர்
ஆண்டும் ஒன்று ஆகிவிட்டது
இன்புடனே நல்லருமைக் கணவனாய்
இயல்பில் கோமகனாக அம்மாவுக்கு
உறுதுணையாக எப்போதும் சகோதரர்களுக்கு
உவகையழகுடன் உபசரிப்பு உறவுகளுக்கு
இவையனைத்தும் போதும் என இறையடி சேர்ந்தீர்கள்
நினைவுகள் அழிவதில்லை
சேர்ந்திருந்த நிஜத்தை இழந்தாலும்
சேர்த்துவைத்த நினைவுகள் ஏராளம்
வாழ்வோடு எம்முடன் இணைந்திருக்கும்
நாம் வாழ்கின்ற காலம்வரை
எம் குடும்பத்தின் ஆணிவேரே
உங்கள் அருள்முகத்தை முன்நிறுத்தி
என்றும் உங்கள் நினைவுடனே வாழுகிறோம்
இறைவனிடம் கலந்திட்ட உங்கள் ஆன்மா
இளைப்பாறுதல் அடையவேண்டி மன்றாடுகிறோம்
என்றும் உங்கள் நினைவுகளை
நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்