யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், முழங்காவிலை வதிவிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி பேரின்பநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.