5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீச்சந்திரன் தங்கம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு ஓடிற்றோ
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும் அம்மா..
பொன்னோடு பொருள் சேர்த்து
பெரு வாழ்வு வாழ்ந்தாலும்
அம்மாவின் நிழலின் கீழ் வாழ்கின்ற வரம் வருமோ!!!
உம் உதிரத்தால் எமக்குள் உம்மை சுமக்கின்றோம்
உடலை பிரிந்தோமே தவிர உம்மையல்ல
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்