Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1941
இறப்பு 22 APR 2020
அமரர் ஜெகதீச்சந்திரன் தங்கம்மா
வயது 79
அமரர் ஜெகதீச்சந்திரன் தங்கம்மா 1941 - 2020 மூளாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீச்சந்திரன் தங்கம்மா அவர்கள் 22-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர் லோகாம்பிகை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற ராசா வாத்தியார்(கந்தசாமி- சுழிபுரம்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெகதீச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், இரத்தினசபாபதி, தம்பிராசா மற்றும் தனலட்சுமி, பரமநாதன், தேவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகலா அவர்களின் அன்பு மாமியாரும்,

கீர்த்திகன், சங்கீர்தனன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2020  புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மூளாய் பித்தனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 21 May, 2020