யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெகநாதன் அருணாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இந்த உலகை விட்டு சென்று
ஒரு வருடம் ஓடி விட்டது
ஒரு தெய்வத்தையே கணவனை அடையும்
பாக்கியத்தை பெற்றேன் ஒரு துன்பமும்
துயரமும் இல்லாமல் என்னை கவனித்தீர்கள்
மகிழ்ச்சியான வாழ்க்கை அன்பான
பிள்ளைகள் மருமக்கள், பேரபிள்ளைகள்
எனக்கு ஒரு கணவனாய் மட்டுமல்லாமல்
ஒரு தகப்பனாய், சகோதரனாய், தோழனாய்
சில நேரங்களில் ஒரு மகனாயும் இருந்து
ஆதரவாக அரவணைத்து வழி நடத்தினீர்கள்
இந்த 37 வருட இல்லற வாழ்க்கையில்
நான் ஒரு போதும் ஒரு விடயத்திற்கும்
கஷ்டப்பட்டதில்லை மனதளவில் ஒரு
துளிகூட கவலைப்பட்டதில்லை
நான் அழுவது உங்களுக்கு கடுகளவும்
மிடிக்காது ஒரு போது ஒன்றுக்கும்
அழவிட்டதில்லை ஆனால்
இங்போது என் மிகுதி காலம் முழுவதும்
அழவிட்டு சென்று விட்டீர்களே
எங்கு சென்றாலும் நான் கூட
வராமல் செல்ல மாட்டீர்கள் ஏன்
இந்த முறை மட்டும் என்னை விட்டு
தனியே சென்றீர்கள்
எல்லா விதத்திலும் உறுதுணையாய்
இருந்து வழி நடத்தினீர்கள்
இப்போது நீங்கள் இல்லாமல்
என்ன செய்வது என்று தெரியாமல்
பரிதவிக்கிறேன்
உங்களையே என் வாழ்க்கையாக
நேசித்த எனக்கு இப்போது வாழ்க்கையே
வெறித்தோடி விட்டது நீங்கள் இல்லாமல்
உங்களை பற்றி எழுதுவதென்றால்
இன்னும் ஆயிரம் பக்கம் எழுதலாம்
உங்களின் பிரிவால் வாடும்
மனைவி மஞ்சுளா