யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதிமலர் சடாட்சரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டு நான்கு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா..
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா..
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா!
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்..
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா..
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 05-02-2026 வியாழக்கிழமை அன்று 8 Cheltenham villas Stanley Rd, Croydon CR0 3QA, UK எனும் முகவரில் நடைபெற்று அதனைதொடர்ந்து மதியபோசன நிகழ்வும் நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.